என்னோட அடுத்த பட ஹீரோ இவர்தான்.. சுதா கொங்காராவின் உறுதிமொழியால் ரசிகர்கள் மகிழ்ச்சி

’சூரரைப்போற்று’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ இவர்தான் என உறுதிபட கூறி இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது என்பதும் குறிப்பாக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ’சூரரைப்போற்று’ திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த காட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த காட்சியை இயக்குனர் சுதா கொங்காரா நேரில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

’சூரரைப்போற்று’ சிறப்பு காட்சி முடிந்தவுடன் பேட்டி அளித்த சுதா கொங்காரா இந்த படம் இன்று தான் ரிலீஸ் ஆனது போல் உள்ளது என்றும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த அனுபவம் போல் இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் தன்னுடைய அடுத்த படத்தின் ஹீரோ சூர்யாதான் என்றும் ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் பணி முடிந்தவுடன் சூர்யா நடிக்கும் படத்தின் பணி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் ’சூரரைப்போற்று’ படத்திற்கு விருது அளித்த நீதிபதிகள் மற்றும் இந்த படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார். ’சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் முடிந்ததும் அடுத்த படம் சூர்யாவின் படம் தான் என சுதா கொங்காரா உறுதிமொழி கொடுத்ததை அடுத்து சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்துக்கு பதில் யாஷிகாவா? ரசிகர்கள் அதிருப்தி!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அஜித் வருவார் என்று வதந்தி கிளம்பிய நிலையில் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. இந்த நிலையில் அஜீத்துக்கு பதிலாக யாஷிகா வந்தது

நீங்களுமா ஐஸ்வர்யா ராஜேஷ்? உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களால் நெட்டிசன்கள் இன்ப அதிர்ச்சி!

பிரபல நடிகைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சகட்ட கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்துவார்கள் என்பது தெரிந்ததே. ஆனால் திரைப்படங்களில் கூட அதிக கவர்ச்சி இல்லாமல்,

அதுல நமக்கு ஏதோ ஒரு செய்தி இருக்கு: 'பொன்னியின் செல்வன்' குறித்து பிரபலங்கள்!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக

தி லெஜண்ட்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? சென்சார் சான்றிதழ் தகவல்!

பிரபல தொழிலதிபர் சரவணன் நடித்த 'தி லெஜண்ட்'  திரைப்படம் வரும் 28ஆம் தேதி பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி

கார்த்தியின் 'விருமன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றமா?

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான 'விருமன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது