அஜித் படத்தில் செய்ததை ரஜினி படத்திலும் செய்வேன்- சுதன்ஷூ பாண்டே

  • IndiaGlitz, [Monday,May 09 2016]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் டெல்லியில் முடிந்த இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் அக்ஷயகுமார் மெயின் வில்லனாக நடித்தபோதிலும், 'பில்லா 2' படத்தின் வில்லன் சுதன்ஷூ பாண்டேவும் இன்னொரு வில்லனாக நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

தனது கேரக்டர் குறித்து சுதன்ஷூ பாண்டே கூறியதாவது: இந்த படத்தின் முதல்பாகமான 'எந்திரன்' படத்தில் விஞ்ஞானியாக நடித்திருந்த Danny Denzongpa அவர்களின் மகனாக நான் நடிக்கின்றேன். இந்த படத்தில் நானும் ஒரு விஞ்ஞானிதான். அக்ஷய்குமாருடன் நான் இணைந்து நடித்த காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் டெல்லியில் படமாக்கப்பட்டது. விரைவில் ரஜினியுடன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.

என்னுடைய கேரக்டருக்காக ஐந்துவித ஹேர்ஸ்டலை ஷங்கர் தேர்வு செய்து அவற்றில் ஒன்றை பயன்படுத்தியுள்ளார். மேலும் எனது விஞ்ஞானி கேரக்டருக்காக அமெரிக்காவில் இருந்து ஸ்பெஷல் கண்ணாடியை ஷங்கர் வரவழைத்துள்ளார்' என்று கூறினார். எனது முதல் தமிழ்ப்படமான 'பில்லா 2' படத்தில் நானே தமிழில் டப் செய்திருந்தேன். அதேபோல் ஷங்கர் அனுமதித்தால் '2.0' படத்திலும் தமிழில் டப் செய்ய காத்திருக்கின்றேன்' என்று சுதன்ஷூ பாண்டே கூறியுள்ளார்.

More News

சூர்யாவின் '24' படத்தின் சென்னை வசூல் நிலவரம்

சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடிப்பில் விக்ரம்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான '24' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக உலகம் முழுவதும் ஓடி வருகிறது...

கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' ரிலீஸ் தேதி

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய இரண்டு படங்களை மட்டுமே இயக்கி கோலிவுட்டின் முன்னணி இயக்குனர் பட்டியலில் இடம்பெற்ற 'இறைவி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகிய நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

தேர்தல் பிரச்சார பணியில் திடீரென இறங்கும் சிம்பு

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வரும் 20ஆம் தேதி என்று கூறப்படும் நிலையில் அதற்கு முன்னதாக சிம்புவின் தனிப்பாடல் ஒன்று ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது...

இன்று மாலை 'ரெமோ' குறித்த முக்கிய அறிவிப்பு?

சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினிமுருகன்' சூப்பர் ஹிட் ஆனதால் அடுத்து அவர் நடித்து வரும் நகைச்சுவை திரைப்படமான 'ரெமோ' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.....

விஜய்சேதுபதியின் வில்லனாகிறார் 'வேதாளம்' வில்லன்.

தல அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான 'வேதாளம்' படத்தில் வில்லனாக நடித்த கபீர்சிங் தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 'றெக்க' படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளாராம்....