ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் படத்தின் டைட்டில் இதுவா?

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று நாயகர்களும் அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகிய மூன்று நாயகிகளும் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விஜய் டிவி டிடியும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் .

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது .

இந்த படத்திற்கு ’காபி வித் காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் சுந்தர் சி பாணியில் ரொமான்ஸ் மற்றும் காமெடியில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

'விக்ரம்' பிளாஷ்பேக் காட்சியில் இந்த பிரபல நடிகை நடித்துள்ளாரா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் பிரபல நடிகை ஒருவர் 10 நிமிட காட்சியில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

என்னை பொருத்தவரை மோடி-அம்பேத்கர் ஒப்பீடு சரிதான்: எஸ்.ஏ.சந்திரசேகர்

என்னை பொருத்தவரை பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் எந்தவித தவறும் இல்லை என தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

ஆண்கள் எதற்கு? செக்ஸ் பொம்மையே போதுமே... பரபரப்பைக் கிளப்பும் பிரபல மாடல் அழகி!

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி ஒருவர், செக்ஸ் பொம்மைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன், திருமணம்

இரட்டை இலை வழக்கு: பிரபல நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கம்!

 இரட்டை இலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரா என்பவர் பரிசாக கொடுத்ததாக நடிகையின் ரூ.7.12 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன .

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்கள் இயக்க துடிப்போம்: தமிழ் இயக்குனருக்கு குவியும் கண்டனம்

இந்தியை ஏற்க மாட்டோம் ஆனால் இந்தி படங்களை இயக்க மட்டும் துடிப்போம் என தமிழ் இயக்குனர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள நிலையில் அவருக்கு ஏராளமான