த்ரிஷா-சிம்ரன் இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

தமிழ் திரையுலகின் சீனியர் நடிகைகளான த்ரிஷாவும் சிம்ரனும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகியோர் சகோதரிகளாக நடித்துள்ளதாகவும் இந்த படத்திற்கு 'சுகர்' என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. 'டைட்டில்' குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

த்ரிஷா, சிம்ரன், சதீஷ், ஜெகபதிபாபு, அபினய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்து வருகிறார். சரவணன் ராமசாமி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவரும் தண்ணீருக்கடியில் நிகழும் ஒரு சண்டைக்காட்சியில் நடித்துள்ளதாகவும், இதற்காக இருவருக்கும் முறைப்படி பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

சென்னை, கேரளா, பிச்சாவரம், தாய்லாந்து போன்ற இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளதாகவும் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது.