close
Choose your channels

சினிமாவில் அறிமுகமாகிறாரா ஷாருக்கின் மகள்? மகிழ்ச்சியான தகவல்!

Wednesday, February 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம்வரும் நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா கானை பற்றிய ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஷாருக்கான் மற்றும் கௌரி கான் தம்பதிகளின் ஒரே செல்ல மகள் சுஹானா கான் அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடிப்பு குறித்த பயிற்சி படிப்பை முடித்துக் கொண்டு சமீபத்தில் மும்பைக்குத் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் இயக்குநர் ஜோயா அக்தர் இயக்கத்தில் நெட்பிளிஸ்க்கு தயாராகும் “தி ஆர்ச்சீஸ்” எனும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடம் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்தப் படத்தின் ஹீரோயின் யாரெனும் தகவலை இன்னும் படக்குழு அறிவிக்காமல் இருந்து வருகிறது.

இந்நிலையில் சுஹானா கான் சினிமாவில் நடிக்க இருக்கிறார் என்றும் அவர் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவாகும் தி ஆர்ச்சரில் கலக்கப்போகிறார் என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன. உறுதிப்படுத்தப்படாத இந்தத் தகவலையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் சுஹானா கானைப் போலவே ஷாருக்கின் மூத்த மகன் ஆர்யன் கான் அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு தயாராகவுள்ள ஒரு வெப் தொடருக்கு கதையாசிரியராக அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆர்யன் கானிற்கு நடிப்பதில் விருப்பமில்லை என்று நடிகர் ஷாருக்கான் ஒருமுறை கூறியிருந்தார். இந்நிலையில் அவர் ஷாருக்கான் மற்றும் கௌரிகானின் சொந்த தயாரிப்பான Red Chillies Entertainment நிறுவனம் தயாரிக்கும் ஒரு வெப் தொடருக்கு எழுத்தாளராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் ஷாருக்கானின் மகள் மற்றும் மகனின் அடுத்தக் கட்டம் குறித்த இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos