சுஹாசினிக்கு அழகி என்ற திமிர்.. பார்த்திபன் பேச்சுக்கு உடனே எழுந்து பதில் கொடுத்த சுஹாசினி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சுஹாசினி அழகின் மீது திமிர் கொண்டவர் என நடிகர், இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் நடைபெற்ற சினிமா விழாவில் கூறிய போது, உடனே எழுந்து அதற்கான பதிலை நடிகை சுஹாசினி அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடித்த "தி வெரட்டிக்" என்ற படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பார்த்திபன், சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசும் போது சுஹாசினி கூறியதாவது: "சின்ன வயதில் என்னுடைய நடிப்பை பார்த்து பலரும் புகழும்போது அவ்வளவு சீனியர் ஆகிட்டோமா?' என்று தோன்றும். ஆனால், அமெரிக்காவுக்கு ஒருமுறை சென்றபோதுதான் என் வயதின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது. அங்கே நடந்த படப்பிடிப்பின் போது, எனது ஒரு ரசிகை, ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது தான் என் வயதின் மதிப்பு எனக்கு உணரப்பட்டது," என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து, பார்த்திபன் பேசும்போது, எனக்கு 50 வயது என்று வெளிப்படையாக சொல்லும் அழகி என்றால் அது சுஹாசினி மட்டும்தான். பொதுவாக, 28 வயதுக்கு பிறகு பெண்கள் வயதை சொல்ல மாட்டார்கள். ஆனால் தனது அழகின் மீது திமிர் கொண்டவர் சுகாசினி," என்று தெரிவித்தார்.
அப்போது உடனே எழுந்த சுஹாசினி "எனக்கு 63 வயதாகிவிட்டது. தெளிவாக சொல்லுங்கள்!" என்று கூற, பார்த்திபன், "பார்த்தீர்களா? இதுதான் திமிர்!" என்று பதிலளித்தார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சியே கலகலப்பாக மாறியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments