படிக்காமல் இருக்கும் ஒரு வாழ்க்கை எனக்கு தேவையா??? விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட 19 வயது சிறுமி!

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

 

தெலுங்கானா மாநிலத்தில் வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத 19 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் அவர் பயின்று வந்த கல்லூரி திறக்கப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த அவர் தன்னுடைய அப்பாவிடம் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு பழைய லேப்டாப் வாங்கிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். ஆனால் ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் தவித்து வந்த அவரது தந்தையால் அதை நிறைவேற்ற முடியவில்லை.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் மெக்கானிக் தொழில் செய்த வருபவர் ஸ்ரீநிவாச ரெட்டி. இவருடைய 19 வயது மகள் ஐஸ்வர்யா. தனது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஐஸ்வர்யா 98.5% மதிப்பெண்ணை பெற்று இருக்கிறார். இந்நிலையில் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த ஐஸ்வர்யாவிற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இடம் கிடைத்து அங்கு படிப்பை தொடர்ந்து இருக்கிறார். கணிதத்தில் 2 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை படிந்து வந்த அவர் கொரோனா காரணமாக அவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.

ஊருக்குத் திரும்பி வந்த ஐஸ்வர்யா, தன்னுடைய குடும்ப வறுமையை நேரில் பார்த்து மனம் உடைந்து இருக்கிறார். இதனால் கடந்த 2 ஆம் தேதி ஒரு கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில் “ஏற்கனவே எனது குடும்பம் வறுமையில் தவித்து வருகிறது. இதில் என்னுடைய படிப்பு செலவு வேறு. நான் என்னுடைய அப்பாவிற்கு பாரமாக வாழ்ந்து வருகிறேன். எனவே என்னால் தொடர்ந்து படிக்க முடியாத நிலைமை ஏற்படலாம். படிக்காமல் என்னால் உயிர்வாழ முடியாது. எனவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” எனத் தெலுங்கில் உருக்கமாக எழுதி வைத்திருக்கிறார்.

இச்சம்பவம் தெலுங்கானாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா காரணமாக பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் நல்ல கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் தன்னால் படிப்பை தொடர முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தினால் 19 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் ஆலோசனைகளை வழங்க வேண்டும் எனும் கோரிக்கைகள் எழுந்து இருக்கிறது.

More News

90% வெற்றியுடன் புதிய கொரோனா தடுப்பூசி… மக்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்குமா புது அறிவிப்பு?

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு!

சமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

எஸ்.ஏ.சி அரசியல் கட்சி விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்

முடிவுக்கு வந்தது விபிஎப் பிரச்சனை: தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன

அர்ச்சனாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்: திருடனாக மாறும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் பல சுவராஸ்யமாக இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க், 'பாட்டி சொல்லை தட்டாதே'