சுஜாவருணி குறிப்பிட்ட 'அத்தான்' நான் தான்! உறுதி செய்த நடிகர்

  • IndiaGlitz, [Monday,May 21 2018]

பிக்பாஸ் மூலம் புகழ் பெற்ற நடிகை சுஜாவருணி, சிவாஜிகணேசன் பேரனும் ராம்குமார் மகனுமாகிய சிவாஜிதேவ்வை காதலிப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது. சமீபத்தில் கூட திருப்பதியில் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதோடு இருவருக்கும் நிச்சயமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ள சிவாஜிதேவ், 'சுஜாவின் ரசிகர்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவெனில் நானும் சுஜாவும் 11 வருடங்களாக காதலித்து வருவது உண்மைதான். எனது இயற்பெயர் ஷிவகுமார். எனது தாயார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்த பின்னர் சிவாஜிதேவ் என்ற என் பெயரை ஷிவகுமார் என்று அவருடைய ஆசியுடன் மாற்றி கொண்டேன். இனி இந்த பெயரில்தான் திரையுலகிலும் நடிக்கவுள்ளேன்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சுஜா குறிப்பிட்ட 'அத்தான் 'நான் தான். நாங்கள் இருவரும் விரைவில் எங்கள் திருமண அறிவிப்பு குறித்த தகவலை வெளியிடவுள்ளோம். அதுவரை எங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்குக் மதிப்பு கொடுத்து அமைதி காக்குமாறு மீடியா நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். ஷிவகுமார் தான் பதிவு செய்த டுவிட்டுக்கள் அனைத்தையும் சுஜா வருணி ரீடுவீட் செய்துள்ளதால் இந்த செய்தி உண்மை என்றே உறுதி செய்யப்படுகிறது.

More News

கர்நாடகத்திற்கு வருமாறு ரஜினிகாந்துக்கு குமாரசாமி அழைப்பு

எடியூரப்பா தனது மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் நாளை மறுநாள் புதிய முதல்வராக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்கவுள்ளார். 

நயன்தாராவை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகர்

சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் சிங்கிள் பாடலான 'எனக்கு கல்யாண ஆசை வந்துருச்சுடி' என்ற பாடலில் நடிகை நயன்தாராவிடம் காதலை தெரிவிக்கும் வகையில் யோகிபாபு நடித்த காட்சிகள்

பிரம்மாண்டமான அரங்கத்தில் ஜீவா படத்தின் படப்பிடிப்பு 

'கலகலப்பு 2' படத்தின் வெற்றியை அடுத்து கோலிவுட்டில் மீண்டும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தியுள்ள நடிகர் ஜீவா தற்போது 'கொரில்லா' மற்றும் 'கீ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

அஞ்சலியின் அடுத்த படத்தின் அட்டகாசமான டைட்டில்

விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி நடித்த 'காளி' திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சமுத்திரக்கனியின் 'நாடோடிகள் 2',

விஜய் ஆண்டனியின் 'காளி' ஓப்பனிங் வசூல் எப்படி?

விஜய் ஆண்டனி, அஞ்சலி நடிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கிய 'காளி' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த படத்தின் முதல் வாரயிறுதி சென்னை வசூல் குறித்த தகவல்களை தற்போது பார்ப்போம்