கார்த்தியின் 'சுல்தான்' படத்தின் சூப்பர் அப்டேட்!

  • IndiaGlitz, [Friday,October 23 2020]

கார்த்தி நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகிவரும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தனது பகுதியின் டப்பிங் பணிகளை கார்த்தி தொடங்கி விட்டார் என்றும் வெளி வந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கி உள்ளன. முதல் கட்டமாக ‘சுல்தான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘சுல்தான்’ படத்தின் இந்த சூப்பர் அப்டேட் காரணமாக கார்த்தி ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

சுல்தான் திரைப்படம் திரையரங்குகளில் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே தினத்தில்தான் விஜய்யின் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ‘சம்பவம்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

கார்த்தி ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தவறாக வெளியிடப்பட்ட நீட்தேர்வு ரிசல்ட்… மனமுடைந்து உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி!!!

கொரோனாவுக்கு நடுவிலும் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடைபெற்று முடிந்தது.

சூரி நில மோசடி விவகாரம்: விஷ்ணுவிஷால் தந்தையின் அதிரடி நடவடிக்கை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சூரி, பிரபல நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீது நில மோசடி புகார் கொடுத்த தகவலை பார்த்தோம்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் உடல்நலப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் ஆல்ரவுண்டர் விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த கபில் தேவ் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் விஜய், விஜய்சேதுபதி பட நாயகி!

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கிவரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்

கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த கவுண்டமணி!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் காமெடி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி திடீரென உடல்நலக் குறைவாக இருப்பதாக வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது