'ஜெயிலர்' படத்தின் சென்சார் சான்றிதழ்.. அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்..!

  • IndiaGlitz, [Thursday,July 27 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ’ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ரஜினிகாந்த், கலாநிதி மாறன், தமன்னா, நெல்சன், அனிருத் உட்பட படக்குழுவினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆக இன்னும் பத்து நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போது சென்சார் பணிகள் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

More News

தனுஷின் 'D51' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விஜய், நயன் படத்துடன் கனெக்சன்..!

தனுஷ் நடித்து முடித்துள்ள 49வது திரைப்படமான 'கேப்டன் மில்லர்' விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவரது 50வது திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தனுஷ்

'டைனோசர்ஸ்' பட இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரமாண்டமாக உருவாகும் அடுத்த படம்..!

எம்ஆர் மாதவன் என்பவர் இயக்கத்தில் உருவாகிய 'டைனோசர்ஸ்' என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகி

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. பவன் கல்யாண் குற்றச்சாட்டுக்கு நாசர் பதிலடி..!

தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா உலகினர் வெளியே வரவேண்டும் என்றும் அப்போதுதான்

'சந்திரமுகி 2' படத்தின் முக்கிய அப்டேட்.. சூப்பர் வீடியோவை வெளியிட்ட படக்குழு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களாக உருவாகி வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப

'குக் வித் கோமாளி சீசன் 4': போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் தற்போது ஒளிபரப்பாகி வரும் நான்காவது சீசன் வழக்கம்போல்