close
Choose your channels

சூர்யாவின் அடுத்த படத்தின் சூப்பர் அப்டேட் தந்த சன் பிக்சர்ஸ்!

Sunday, January 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் சூர்யாவின் 40வது படம் என்றும் இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த தேர்வும் நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் ’சூர்யா 40’ படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று டி.இமான் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு மிகச்சிறந்த அறிவிப்பாக உள்ளது என்பதும் சூர்யா ரசிகர்களும் இந்த அறிவிப்பினை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.