சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த 4 நட்சத்திரங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கியது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருக்கும் 4 நட்சத்திரங்களின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

அதில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி மற்றும் விநாயகர் ஆகிய நால்வர் இந்தப் படத்தில் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கண்ட நால்வரும் இந்த படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது அந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தமன்னா, பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் உள்பட பலர் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியான நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வெற்றிமாறனின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் ராஜீவ் மேனன் இணைந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பூஜை: வைரல் புகைப்படம்!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் இரண்டாவது பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

சூரரைப் போற்று ஒளிப்பதிவாளரை திருமணம் செய்த பிரபல நடிகை: வைரல் புகைப்படங்கள்

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.. 

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த இரண்டு நடிகைகளா? கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் வெகு விரைவில் 6வது சீசன் தொடங்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

நடிகர் அமிதாப்பச்சனுக்கு மீண்டும் கொரோனா: டுவிட்டரில் என்ன சொல்லியிருக்கார் பாருங்கள்!

கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனுக்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் இது குறித்து பதிவு செய்துள்ளார்.