close
Choose your channels

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அடுத்த பட அதிரடி அறிவிப்பு!

Thursday, October 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’, தளபதி விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 65, சூர்யா நடித்த நடிப்பில் பாண்டிராஜ் இயக்கவுள்ள திரைப்படம், தனுஷ் நடிக்க உள்ள ஒரு திரைப்படம் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் இன்னொரு படத்தின் அறிவிப்பும் தற்போது வெளிவந்துள்ளது. சுந்தர் சியின் அவ்னி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ’நாங்க ரொம்ப பிஸி’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படம் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாக வெளிவந்த செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் ’நாங்க ரொம்ப பிசி’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ’விரைவில்’ சன் டிவியில் என்று பதிவு செய்துள்ளது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகாமல் நேரடியாக சன் டிவியில் வரும் தீபாவளி அன்று இந்த படம் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது

பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பதும், இந்த படத்தை சுந்தர் சியின் உதவியாளர் பத்ரி இயக்கியுள்ளார் என்பதும், இந்த படம் கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘மாயா பஜார்’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.