என்னைக்கும் கொறையாத மவுசு.. 'கூலி' படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்தின் 39 வினாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த மாஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
"என்றைக்கும் குறையாத மவுசு" என்ற கேப்ஷனுடன் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவில், 'கூலி' படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகள், ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகள், லோகேஷ் கனகராஜ் ரஜினிக்கு காட்சியை விளக்கும் காட்சிகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து, இந்த வீடியோ லட்சக்கணக்கான பார்வையாளர்களை பெற்று, வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
என்னைக்கும் கொறையாத மவுசு💥 #PowerHouseVibe is now available on Instagram & YT Shorts Audio🔊#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges… pic.twitter.com/IRVk8scxQx
— Sun Pictures (@sunpictures) May 23, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments