'அரங்கம் அதிரட்டுமே'.. 'விசில் பறக்கட்டுமே'.. 'கூலி' படத்தின் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 14 என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், இந்த படம் வெளியாக இன்னும் நூறு நாட்கள் சரியாக இருப்பதை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினிகாந்த் அசத்தலாக தலைமுடியை கைவிரலால் கோதிக் கொண்டிருக்கும் காட்சிகள், சூரியன் மறையும் நேரத்தில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் காட்சிகள், அட்டகாசமாக விசில் அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் இந்த பதிவில் "அரங்கம் அதிரட்டுமே, விசில் பறக்கட்டுமே!" என்ற கேப்ஷன் உடன் வெளியாகி உள்ளதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, ஷோபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையில் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
Arangam Adhirattume, Whistle Parakkattume!🔥💥 #CoolieIn100Days ⏳#Coolie worldwide from August 14th 😎@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @ArtSathees… pic.twitter.com/M8tqGkNIrJ
— Sun Pictures (@sunpictures) May 6, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments