'முடிச்சிடலாமா'.. 'கூலி' படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "கூலி" படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடந்துள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிட்டதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட வீடியோவில், ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு காட்சியை லோகேஷ் கனகராஜ் இயக்கும் போது, "முடிச்சிடலாமா?" என்ற வசனத்துடன் "கூலி" படப்பிடிப்பு முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், அனைத்து பணிகளும் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, "ஜெயிலர் 2" படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்த நிலையில், இனி அந்த படப்பிடிப்பில் முழு கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் "கூலி" படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட அப்டேட்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
It's a super wrap for #Coolie 🔥@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges @philoedit @Dir_Chandhru @PraveenRaja_Off pic.twitter.com/ulcecQKII1
— Sun Pictures (@sunpictures) March 17, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com