சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில்,  “கேன் (can)” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

ஷோபனா கிரியேஷன்ஸ் சார்பில், D. கருணாநிதி தயாரிப்பில், சன் டிவி புகழ் ஆடம்ஸ் இயக்கத்தில், பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி, இன்றைய தலைமுறையின் காதலைப் பெண்களின் பார்வையில் சொல்லும், அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கேன் (can).” புதுமையான வடிவத்தில் வெளியாகியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்களின் மனதில் இடம் பிடித்த ஆடம்ஸ், திரைப்படங்களில் 4 வருடகாலம் உதவி இயக்குநர், இணை இயக்குநராக பணியாற்றிய பிறகு, முதன்முறையாக இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்றைய தலைமுறை இளம் பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி, நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.

படத்தின் கதாபாத்திரங்களை கலைத்துப் போட்டு, ஒரு புதிய முகத்தை உருவாக்கிக் காட்டியிருக்கும், நவீன வடிவிலான ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. புதுமையான முறையில் உருவாகியுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

இப்படத்தில் பிரணவி மனுகொண்டா, ஹேமந்த் மேனன், அக்ஷரா ராஜ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, கலையரசன், யாஷிகா ஆனந்த், தம்பி ராமையா, ரோபோ சங்கர், கோவை சரளா, கருணாகரன், மாறன், ஸ்ரீமன், VTV கணேஷ், கௌசல்யா, ரெடின் கிங்ஸ்லி, நாஞ்சில் விஜயன், கார்த்திக் கருப்பு காளை, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க, குளிர் பொங்கும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறையை, திரையரங்கில் சொட்டச் சொட்ட காதலுடன் ஜில்லென கொண்டாடும்படியாக இப்படம் இருக்கும்.

இப்படத்தினை ஷோபனா கிரியேஷன்ஸ் சார்பில் D.கருணாநிதி பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More News

வரலாற்றில் பேசும் படமாக மாறுமா ?கயல் ஆனந்தியின் மங்கை திரைப்படம்.

மற்ற பெண்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்கிய இத்திரைப்படம் தான் எனது வாழ்க்கையின் சிறந்த படம் என ஆனந்தி கூறியுள்ளார்...

திருமண பொருத்தம் எப்படி பார்க்க வேண்டும் ? ஜோதிடர் Usha Ganesh

இந்த வீடியோவில், பிரபல ஜோதிடர் Usha Ganesh, திருமண பொருத்தம் பார்ப்பதன் முக்கியத்துவம், ஜாதகத்தில் பார்க்க வேண்டிய முக்கிய பொருத்தங்கள்

சிவ புராண ரகசியங்கள் - யாரும் அறியாத சிவன்! ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார்

ஆன்மீகக் கிளிட்ஸ் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள புதிய வீடியோவில், ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார், சிவ புராணம் படிப்பதன் நன்மைகள் குறித்து உரையாற்றுகிறார்.

படம் புடிக்கலைனா என்ன செருப்பால அடிங்க.. கடந்த வாரம் ரிலீசான படத்தின் இயக்குனர் பேட்டி..!

கடந்த வாரம் வெளியான திரைப்படத்தின் இயக்குனர் 'தயவு செய்து தியேட்டருக்கு வந்து படம் பாருங்கள், ஒருவேளை நீங்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தபின் உங்களுக்கு படம் பிடிக்கவில்லை

விஜய் டிவி புகழ் நாயகனாக நடித்த 'மிஸ்டர் ஜூ கீப்பர்'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' உட்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட புகழ் தற்போது சில படங்களில் நகைச்சுவை நடிகராகவும் ஓரிரு படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதை பார்த்தோம்.