சன் டிவி பிரபலம் ஆனந்தக்கண்ணன் திடீர் மறைவு: ரசிகர்கள் அதிர்ச்சி!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

சன் டிவியில் பிரபல தொகுப்பாளராகவும் தொலைக்காட்சி தொடர் நடிகராகவும் இருந்த ஆனந்த கண்ணன் திடீரென மறைந்தது அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது

கடந்த 90ஆம் ஆண்டுகளில் சன் டிவியில் பிரபலமாக இருந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணன். குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இவருக்கு ஏராளமானோர் ரசிகர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சன் டிவியில் தொகுப்பாளராக இருந்து கொண்டு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். அவர் நடித்த ’சிந்துபாத்’ என்ற தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆனந்த கண்ணன் அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சிங்கப்பூர் தமிழரான ஆனந்த கண்ணன் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் ஆர்கே சுரேஷ் உள்பட பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஆனந்த கண்ணன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு: பிக்பாஸ் தமிழ் நடிகையின் வீடியோ!

தான் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் இருப்பினும் தனக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ரிசல்ட் வந்திருப்பதாகவும் பிக் பாஸ் தமிழ் நடிகை ஒருவர்

அச்சுறுத்தலுக்கு இடையே இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த தாலிபான்கள்… என்ன காரணம்?

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் கடந்த 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் 50% குழந்தைகளுக்கு கொரோனா? பீதியை கிளப்பும் எய்ம்ஸ் இயக்குநர்!

இந்தியாவில் 3 ஆம் அலை கொரோனா தாக்கம் ஏற்படுவதற்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலோரி,

விமானத்தின் டயரைப் பிடித்துத் தொங்கிய 3 பேர்… அலற வைக்கும் ஆப்கன் வீடியோ!

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை தாலிபான்கள் தற்போது மூடியுள்ளனர்.

கார் வாங்குனதுக்கு அப்புறம் சின்னராச கையில புடிக்க முடியலை: ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் புத்தம் புதிய ஆடி கார் வாங்கினார் என்பதும் அந்த காருடன் கூட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு