close
Choose your channels

சன் டிவி தொகுப்பாளினியின் கர்ப்பகால போட்டோஷுட்: செம வைரல்!

Sunday, August 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக திருமண போட்டோ ஷூட் புகைப்படங்கள் எடுப்பது போலவே கர்ப்பகாலத்தில் புகைப்பட போட்டோஷூட் எடுப்பது ட்ரெண்டாகி வருகிறது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் தண்ணீருக்குள் போட்டோஷூட் எடுத்த நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வைரலாகி வந்தன என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது சன் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் தியா மேனனின் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் தியா மேனன். அதுமட்டுமின்றி சூர்யா டிவியிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வருகிறார். அதேபோல் சன் மியூசிக் சேனலில் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல காசு ஆகிய நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்

இந்த நிலையில் சிங்கப்பூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கார்த்திக் சுப்பிரமணியn என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தியா மேனன் தற்போது கர்ப்பமாக உள்ளார். மேலும் கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கும் தியா மேனனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.