'தளபதி 64' படத்தின் முதல்கட்ட வியாபாரம்: முன்னணி நிறுவனம் கைப்பற்றிய உரிமை

  • IndiaGlitz, [Saturday,November 30 2019]

தளபதி விஜய் நடிக்கும் ஒவ்வொரு படமும் அந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்னரே கிட்டத்தட்ட அனைத்து வித வியாபாரமும் முடிந்துவிடும் என்பது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் ’தளபதி 64’படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டெல்லியிலும் நடந்து முடிந்துள்ள நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட வியாபாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது

’தளபதி 64’படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற முன்னணி டிவி நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி மிகப்பெரிய தொகை ஒன்றுக்கு கைப்பற்றியுள்ளது

இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை சன் நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து ’தளபதி 64’ படத்தின் மற்ற வியாபாரங்களும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

’தளபதி 64’படத்தின் டெல்லி படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரம் கர்நாடகாவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, அந்தோணி வாழ்க்கைச் உள்பட படக்குழுவினர் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

More News

பார்க்காமல் நிகழ்ந்த ஃபேஸ்புக் காதல்: பார்த்தவுடன் ஏற்பட்ட விபரீதம்!

ஃபேஸ்புக்கில் ஒருவரை ஒருவர் பார்க்காமல் ஏற்பட்ட காதலுக்கு பின், காதலர்கள் நேரில் சந்தித்தபோது ஏற்பட்ட விபரீதத்தால் தேனி அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை: 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை 3 நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

பிரியங்கா ரெட்டி கொலையான அதே இடத்தில் மேலும் ஒரு பெண் எரித்து கொலை!

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி அவர்கள் நான்கு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை: என்ன நடந்தது?

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் அங்கு நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சல்லாப ஆண்களிடம் நூதன முறையில் கொள்ளையடிக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்

சல்லாபத்திற்காக வரும் ஆண்களிடம் நூதனமான முறையில் கொள்ளையடிக்கும் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் குறித்த திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது