Sun TV வழங்கும் 'நானும் ரௌடிதான்.சிவாங்கி தொகுத்து வழங்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி


Send us your feedback to audioarticles@vaarta.com


Sun TV மற்றும் Media Masons இணைந்து உங்கள் ஞாயிற்று கிழமைகளை குதூகலிக்க செய்ய வருகிறது "நானும் ரௌடிதான்" நிகழ்ச்சி. இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மோதும் பிரமாண்டமான விளையாட்டு நிகழ்ச்சியாக உங்களை மகிழ்விக்கும், இது விளையாட்டு நகைச்சுவை மட்டுமல்லாமல் பார்ப்பவர்களை பிரமிப்பூட்டும் வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கும்படியான நினைவாற்றல், பொது அறிவு, பகுப்பாய்வு திறன் மற்றும் ஜனரஞ்சகமான போட்டியாகும்.
ஒவ்வொரு எபிசோடிலும் நான்கு சுவையான, பரபரப்பான, சுற்றுகள் இடம்பெறும். இதில் பெரியவர்கள் சிறிய ‘ரௌடிகளை’ எதிர்கொண்டு அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். Sun TV-யின் பிரபலமான அஸ்வத் பெரியவர்களின் அணியை வழிநடத்த, மக்களின் ஏகோபித்த அபிமான சிவாங்கி கிருஷ்ணகுமார் தனது முதல் முழுமையான தொகுப்பாளர் பொறுப்பை எப்போதும் போல மிக சுவாரஸ்யமாக குழந்தைகளின் அணியை வழிநடத்துகிறார்.
நானும் ரௌடிதான் நிகழ்ச்சியின் உண்மையான சிறப்பம்சம் அதன் சிறு போட்டியாளர்களே! அவர்கள் கொண்டிருக்கும் உற்சாகமும், கலாட்டாவும் நிகழ்ச்சியை தொடங்கி முடியும் வரை உங்களை வசீகரிக்கச் செய்யும். எதிர்பாராத திருப்பங்கள், குழந்தைகளின் சேட்டைகள், உற்சாகமான போட்டிகள் மற்றும் சிரிப்பு நிறைந்த தருணங்கள் உங்கள் ஞாயிற்றுக்கிழமையை மகிழ்ச்சியாக மாற்றப் போகின்றன!
பிரமாண்டமான தொடக்கத்துக்கு மேலும் வண்ணம் சேர்க்க, பிரபல செப் வெங்கடேஷ் பட், மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர் தீனா மற்றும் அன்னம் தொடரின் நட்சத்திரமான அபி நட்சத்திரா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள்.
அட்டகாசமான போட்டிகள், மனமகிழ்வான தருணங்கள், பொழுதுபோக்கு நிரம்பிய ‘நானும் ரௌடிதான்’ வரும் ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு, (30 மார்ச் 2025) Sun TV-யில் பிரமாண்டமாக ஆரம்பமாகிறது! ஒவ்வொரு ஞாயிறும் உங்கள் குடும்பத்துடன் கண்டு மகிழ தயாராகுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com