close
Choose your channels

என் இதயத்தை கண்டுபிடித்துவிட்டேன்': வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சன் டிவி சீரியல் நடிகை

Thursday, December 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை தனது இதயத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி வருங்கால கணவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று ‘சந்திரலேகா’ என்பதும் கடந்த 8 ஆண்டுகளாக பார்வையாளரின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில்தான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் சந்திரா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை ஸ்வேதா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது சீரியல் பார்த்தவர்களுக்கு தெரியும். சீரியல் மட்டுமின்றி இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த இவர் அதன்பிறகு ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து சினிமாவில் வாய்ப்பு குறைவே சீரியல் பக்கம் சென்ற ஸ்வேதா ‘சந்திரலேகா’ என்ற மெகா சீரியலில் நடித்து மிகப் பெரிய புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராமில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீண்ட நாட்களாக நான் என்னுடைய இதயத்தை தொலைத்துவிட்டேன், கடவுளுக்கு நன்றி! தற்போது என் இதயத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஸ்வேதா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.