என் இதயத்தை கண்டுபிடித்துவிட்டேன்': வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்ட சன் டிவி சீரியல் நடிகை

  • IndiaGlitz, [Thursday,December 01 2022]

சன் டிவி சீரியலில் நடித்த நடிகை தனது இதயத்தை கண்டுபிடித்து விட்டதாக கூறி வருங்கால கணவரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் ஒன்று ‘சந்திரலேகா’ என்பதும் கடந்த 8 ஆண்டுகளாக பார்வையாளரின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சமீபத்தில்தான் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் சந்திரா என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை ஸ்வேதா. இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது சீரியல் பார்த்தவர்களுக்கு தெரியும். சீரியல் மட்டுமின்றி இவர் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அஜித் நடித்த ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த இவர் அதன்பிறகு ஜெயம்ரவி நடித்த ’பூலோகம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து சினிமாவில் வாய்ப்பு குறைவே சீரியல் பக்கம் சென்ற ஸ்வேதா ‘சந்திரலேகா’ என்ற மெகா சீரியலில் நடித்து மிகப் பெரிய புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராமில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’நீண்ட நாட்களாக நான் என்னுடைய இதயத்தை தொலைத்துவிட்டேன், கடவுளுக்கு நன்றி! தற்போது என் இதயத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஸ்வேதா தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

வேலை வெட்டி இல்லாத இவங்க திருந்தவே மாட்டாங்களா? எம்ஜிஆர்-சிவாஜி பட நடிகை ஆதங்கம்

சமூக வலைத்தளங்களில் வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பி வரும் நிலையில் இவர்கள் திருந்தவே மாட்டார்களா என எம்ஜிஆர் சிவாஜி படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஒருவர் .

'தளபதி 67' பூஜை இந்த தினத்திலா? 'விக்ரம்' பாணியில் டீசரும் வெளியிட திட்டம்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் பிரம்மாண்டமாக உலகம் முழுவதம் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'தளபதி 67'

கமல், விஜய் பட தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அஞ்சலி

கமலஹாசன், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் கே முரளிதரன் திடீரென மாரடைப்பால் காலமானதால் திரையுலகினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திடீரென மூச்சுபேச்சின்றி மயங்கி விழுந்த அசீம்.. நடிப்பா? உண்மையா?

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான அசீம் திடீரென சரிந்து விழுந்து மூச்சு பேச்சின்றி இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அஜித்தின் புதிய கெட்டப்.. குடும்பத்துடன் இருக்கும் மாஸ் புகைப்படம் வைரல்!

நடிகர் அஜித் கடந்த சில மாதங்களாக 'துணிவு' படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த படத்தின் கேரக்டருக்காக நீண்ட தாடியுடன் காணப்பட்டார் என்பதும் அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆனது