close
Choose your channels

தப்பு மேல தப்பு பண்ணிட்டு இருக்க ரெஜினா... சுனைனாவின் 'ரெஜினா' டிரைலர்..!

Tuesday, June 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்த ‘ரெஜினா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் சுனைனாவின் புத்திசாலித்தனமான காட்சிகள் உட்பட பல காட்சிகள் உள்ளன. மேலும் இந்த ட்ரெய்லரில் பின்னணியில் கூறப்படும் ஒரு சிங்கத்தின் கதையை வைத்து இந்த படத்தின் கதையை ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது. அந்த கதை இதுதான்:



ஒரு சிங்கம் காட்டுல இருக்குற எல்லா பொருளையும் எடுத்துட்டு போய் தன்னுடைய மொத்த தேவைக்காக தன் குகைக்கு உள்ளே வச்சுகிச்சாம். அதனால காட்டில் இருக்கிற மற்ற விலங்குகளுக்கு சாப்பிட எதுவுமே கிடைக்காமல் பயங்கரமான பசி. பசியை பொறுக்க முடியாத எல்லா விலங்குகளும் ஒண்ணா கூடி சிங்கத்தோட குகைக்கு தீ வைத்துவிட்டது. எப்பேர் பட்ட சிங்கமாக இருந்தாலும் குகைக்கு தீ வச்சா வெளியில் வந்து தான் ஆகணும்..

சுனைனா, நிவா ஆதிதன், ரிது மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, விவேக் பிரசன்னா, உள்பட பலர் நடிப்பில் உருவான ‘ரெஜினா’ படத்தை சதீஷ் நாயர் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவில் டாபி ஜான் படத்தொகுப்பில் சதீஷ் நாயர் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.