அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டுக்கு மாறிய சுனைனா

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

கோலிவுட் திரையுலகில் தற்போது தயாரிப்பாளர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் படத்தின் விலையை தயாரிப்பாளர் நிர்ணயம் செய்ய முடிவதில்லை. அப்படியே நிர்ணயம் செய்தாலும், போதுமான நல்ல தியேட்டர்கள் கிடைப்பதில்லை. மேலும் ஆன்லைன் பைரஸி தொல்லை, பெய்டு டுவிட்டர்களின் முதல் நாள் விமர்சனம் போன்ற பல பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சந்திப்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்து காணாமல் போய்விட்டனர்

இந்த நிலையில் டிஜிட்டல் திரைப்படம் என்னும் வெப்சீரியல் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. ஒரு திரைப்படத்திற்கு ஏற்படும் மேற்கண்ட எந்த பிரச்சனையும் இந்த வெப்சீரியலுக்கு இல்லை என்பதால் வருங்காலத்தில் வெப்சீரியல்கள் ஆதிக்கம் கோலிவுட்டில் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மாதவன் நடிப்பில் 'ப்ரீத் என்ற வெப்சீரியலும், பாபிசிம்ஹா, பார்வதி நடிப்பில் ஒரு வெப்சீரியலும் உருவாகி வரும் நிலையில் தற்போது சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கும் ஒரு வெப்சீர்யல் தயாராகவுள்ளது. 'திருதிரு துறுதுறு' படத்தை இயக்கிய ஜே.எஸ்.நந்தினி இந்த வெப்சீரியலை இயக்கவுள்ளார். அடுத்த தலைமுறை இளைஞர்களின் டிரெண்டான வெப்சீரியலில் சுனைனா நடிக்கவிருப்பதை அடுத்து இன்னும் பல பிரபல நடிகர், நடிகைகளும் வெப்சீரியலுக்கு மாற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

More News

தாடி பாலாஜி குடும்பத்தை இணைக்க சிம்பு எடுத்த முயற்சி

தாடி பாலாஜியும், அவருடைய மனைவி நித்யாவும் சமீபத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நித்யா தனது கணவர் பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுக்க வழக்கு விசாரணையில் உள்ளது.

ஐபிஎல் கேப்டன்கள் அனைவரும் இந்தியர்களே! முதல்முறை நடைபெறும் அதிசயம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 10ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 11வது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் இப்போதே ஐபிஎல் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜூக்கு ரஜினி கொடுத்த கால்ஷீட் நாட்கள்

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

சமந்தாவின் அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்

சமந்தா தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'சீமராஜா', விஷாலுடன் 'இரும்புத்திரை', விஜய்சேதுபதியுடன் 'சூப்பர் டீலக்ஸ், 'மகாநதி', யூடர்ன் தமிழ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

30 ஹிரோக்களை சமாளிக்கும் வில்லனாக 'பாகுபலி ராணா'

மார்வலின் பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படம் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்' என்ற படத்தின் டிரெய்லர் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது/