ஜெய் இசையில் 'ஜெயில் குத்து': தேவா பாடும் 'பட்டாம்பூச்சி' பாடல்!

  • IndiaGlitz, [Wednesday,June 15 2022]

சுந்தர் சி மற்றும் ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜெயில்’ குத்துப்பாட்டு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது

‘பட்டாம்பூச்சி’ படத்தில் ஆக்ரோஷமான வில்லனாக நடித்துள்ள நடிகர் ஜெய் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பதும் அவரது கம்போஸிங்கில் உருவான ‘ஜெயில்’ என்ற குத்துபாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேவா குரலை ஒரு குத்துப் பாட்டின் மூலம் கேட்பதில் இசை ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன. இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவும், பென்னிஆலிவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற ‘வேட்டைகள் ஆரம்பம்’ என்ற சிங்கிள் பாடலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது போல் ‘ஜெயில்’ குத்துப்பாட்டும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரகசியமாக ஐதராபாத் வந்த அட்லி: என்ன காரணமாக இருக்கும்?

இயக்குனர் அட்லி மற்றும் நடிகர் ஷாருகான் ரகசியமாக ஹைதராபாத் வந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், உங்களுக்கு என்ன? அசத்தும் பதில் கூறிய அனிருத்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடியை தாண்டி வசூல் மழை பெய்து வருகிறது என்பதும் தெரிந்ததே.

மகளுடன் ரஜினியை சந்தித்த இயக்குனர் ஷங்கர்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சென்று பார்த்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'தலைவர் 169' படம் குறித்த சூப்பர் அப்டேட் கொடுத்த ரெடின்கிங்ஸ்லே!

இயக்குனர் நெல்சன் படம் என்றாலே அந்த படத்தில் ரெடின்கிங்ஸ்லே இருப்பார் என்பதைச் சொல்லவே தேவையில்லை. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 169'

தனுஷின் எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் நடித்த மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.