close
Choose your channels

'அரண்மனை 3' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Wednesday, November 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலரது நடிப்பில் உருவான திரைப்படம் ’அரண்மனை 3’. இந்த திரைப்படம் கடந்த ஆயுத பூஜை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததை அடுத்து நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’அரண்மனை 3’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது. இதன்படி ’அரண்மனை 3’ திரைப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வரும் 12ஆம் தேதி ஒளிபரப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது

திரையரங்குகளில் பார்க்க தவறிய ரசிகர்கள் ஓடிடியில் பார்ப்பதற்கு வசதியாக தற்போது ஜி5 ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளை போலவே ஓடிடியிலும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுந்தர் சி, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு, கோவை சரளா, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சி சத்யா இசையமைத்துள்ளார். செந்தில்குமார் ஒளிப்பதிவில் ,உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் சி யின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.