close
Choose your channels

நேத்து போட்ட தாழ்ப்பாளை திறக்கலையே குருவம்மா.. 'கேங்கர்ஸ்' ஃபர்ஸ்ட் சிங்கிள்..!

Friday, April 11, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் வடிவேலு உள்பட பலர் படத்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இப்படம் ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் சற்று முன் இணையத்தில் வெளியாகி, தீவிரமாக வைரலாகி வருகிறது.

நடிகை கேத்தரின் தெரசா இந்த பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடும் காட்சிகள் இன்று வெளியான வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த பாடலை இசையமைப்பாளர் சி சத்யா கம்போஸ் செய்ய, பாடலை மீனாட்சி மற்றும் குணசுந்தரி பாடியிருக்க, பாடலாசிரியராக பா. விஜய் பணியாற்றியுள்ளார்.

பாடல் வெளியானவுடன் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். "முதல் முறை கேட்டவுடன் அட்டகாசமாக இருக்கிறது", "கிராமத்து ஸ்டைலில், ஒரு கிளாமர் நடனப்பாடல்!" என்ற வகையில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள இந்த ‘கேங்கர்ஸ்’ படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள பாடலின் முதல் சில வரிகள் இதோ:

சாமக்கோழி கூவியாச்சு குப்பன் வீடு பூட்டி கிடக்கு
நேத்து போட்ட தாழ்ப்பாள திறக்கலையே குருவம்மா
வாலிப வயசு வாலிப வயசு

குப்பனோட பொஞ்சாதி குருவம்மா
ஊரு விடிஞ்சும் தூங்குறியே ஏனம்மா
இரவெல்லாம் தூக்கமில்ல பெரியம்மா
இந்த ரவுடிப்பய தூங்கவே விடல்லம்மா

படுக்கையை விரிச்சா எட்டு மணி
விளக்கை அணைச்சா பத்து மணி
முத்தத்தை முடிக்க ரெண்டு மணி
மொத்தத்தை முடிக்க அஞ்சு மணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment