சுந்தர் சியின் 'கேங்கர்ஸ்' உள்பட இந்த வாரம் எத்தனை படங்கள்.. ஓடிடி ரிலீஸ் விவரங்கள்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியாகுவது போலவே, திரையரங்குகளில் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடி தளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன என்பதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த தகவல்களை பார்ப்போம்.
சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிப்பில் உருவான 'கேங்கர்ஸ்' என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வாரம் வெளியாகிறது.
அதேபோல், ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் 'நேசிப்பாயா?' இந்த வாரம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
இதேபோல், 'C4Cinta' திரைப்படம் தமிழ் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி லைவ் தளத்தில், ’மரண மாஸ்’ என்ற மலையாள படம் வெளியாகிறது. அதேபோல், அமேசான் பிரைமில் 'சாரியா பாதம்' என்ற தெலுங்கு படம் மற்றும் 'வாமனா' என்ற கன்னட படம் இந்த வாரம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com