close
Choose your channels

இன்று முதல் தொடங்குகிறது சுந்தர் சியின் 'கலகலப்பு 2'

Wednesday, October 4, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த 'கலகலப்பு' திரைப்படம் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த நல்ல வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இந்த படத்தின் அறிவிப்புகளை இயக்குனர் சுந்தர் சி ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

இந்த தகவலை தயாரிப்பாளர் குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த படம் 2018ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரின் தெரசா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படம் முதல் பாகம் போலவே காமெடிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.