சுந்தர் சியின் 'பட்டாம்பூச்சி' ரிலீஸ் தேதி: 9 படங்களுடன் ரிலீஸ் ஆகிறதா?

  • IndiaGlitz, [Tuesday,June 14 2022]

சுந்தர் சி நடித்த ‘பட்டாம்பூச்சி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சுந்தர்சி நாயகனாகவும் ஜெய் வில்லனாகவும் நடித்த அதிரடி ஆக்சன் திரைப்படம் ‘பட்டாம்பூச்சி’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், முதல் முதலாக ஒரு சைக்கோ வில்லன் கேரக்டரில் ஜெய் நடித்து இருப்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. அதேபோல் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள சுந்தர் சி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பட்டாம்பூச்சி’ திரைப்படம் ஜூன் 24-ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் இந்த படத்துடன் மொத்தம் 9 படங்கள் அதே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 24ஆம் தேதி ஏற்கனவே ’கடமையை செய்’ ’மாயோன்’ ’இரவில் நிழல்’ ’டைட்டானிக் காதலும் கடந்து போகும்’ ’மாமனிதன்’ ‘வேழம்’ உட்பட ஒரு சில படங்கள் ரிலீஸ் தேதியாக அறிவித்து உள்ளன. இருப்பினும் கடைசி நேரத்தில் ஒரு சில படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பத்ரி இயக்கத்தில் சுந்தர் சி , ஜெய், ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள ‘பட்டாம்பூச்சி’ படத்திற்கு கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவும், பென்னிஆலிவர் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும், அதேபோல் ‘வேட்டைகள் ஆரம்பம்’ என்ற சிங்கிள் பாடலும் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் படப்பிடிப்பு: எந்த ஹீரோ படம் தெரியுமா?

ஒரு தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் முதல்முறையாக அஜர்பைஜான் பாராளுமன்றத்தில் நடைபெற இருப்பதாகவும் இந்த காட்சிக்காக மட்டும் 4 கோடி ரூபாய் படக்குழுவினர் செலவு செய்துள்ளதாகவும்

இன்று சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் டி.ராஜேந்தர்: அவருக்கு என்ன தான் பிரச்சனை?

நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளருமான டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

'விக்ரம்' ஏஜெண்ட் டினாவுக்கு கிடைத்த மரியாதை: வைரல் புகைப்படம்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

'விக்ரம்' படத்தில் உண்மையான வசூலை தெரிவித்த கமல்!

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 'விக்ரம்' படத்தின் உண்மையான வசூலை சற்றுமுன் தெரிவித்துள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

நெல்சன் குறித்து ஆர்ஜே பாலாஜி சொன்னது என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன். ஆனால் அவர் இயக்கிய 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த