close
Choose your channels

சுந்தர் சி உடன் முதல் முறையாக இணையும் பிரபல நடிகர்.. 'மூக்குத்தி அம்மன் 2'க்கு அடுத்த படம்?

Wednesday, April 16, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சுந்தர் சி தற்போது "மூக்குத்தி அம்மன் 2" என்ற திரைப்படத்தில் இயக்கிக் கொண்டிருக்கிறார். நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், "மூக்குத்தி அம்மன் 2" படத்தை முடித்தவுடன் அவர் பிரபல நடிகரின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

தமிழ் திரையுலகில் வரிசையாக வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் சுந்தர் சி. ’அரண்மனை 4, மற்றும் ‘மதகஜ ராஜா’ ஆகிய இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தை சுந்தர் சி நடித்து இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வரும் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தர் சி தற்போது "மூக்குத்தி அம்மன்" படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன், அவர் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. "மூக்குத்தி அம்மன் 2" படத்தை முடித்தவுடன் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

’கேங்கர்ஸ்’ "மூக்குத்தி அம்மன் 2" படம் மற்றும் கார்த்தி நடிக்கும் படங்கள் என வரிசையாக சுந்தர் சி படங்கள் வெற்றி பெற்றால், அவர் தமிழ் திரை உலகின் உச்சத்துக்கு சென்று விடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment