சுந்தர் சி அடுத்த படத்தின் பூஜை: டைட்டில், நாயகி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Friday,January 14 2022]

பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி இயக்கத்தில் ’அரண்மனை 3’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் இதனை அடுத்து தற்போது அவர் ‘தலைநகரம் 2’ உள்பட மூன்று படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு ’ஒன் 2 ஒன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருஞானம் என்பவர் இயக்கத்தில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தில் சுந்தர்சி ஜோடியாக ராகினி திரிவேதி என்பவர் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

More News

சுந்தர் சியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

கமல்ஹாசன் நடித்த 'அன்பே சிவம்', ரஜினிகாந்த் நடித்த 'அருணாச்சலம்' உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குநர் சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபித்து உள்ளார்

மனைவி, குழந்தைகளுடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய பொங்கல்: வைரல் புகைப்படங்கள்!

தைத்திங்கள் முதல் நாளான இன்று உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

நயன்தாரா இல்லாமல் சிங்கிளாய் பொங்கல் கொண்டாடும் விக்னேஷ் சிவன்: வைரல் புகைப்படம்

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒவ்வொரு திருவிழாவையும் நயன்தாராவுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக சமீபத்தில் 2022ஆம் ஆண்டு

கார்த்தியின் கலக்கலான 'விருமன்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் வரும் 'விருமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்று முன் கலக்கலான பர்ஸ்ட் லுக்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்: அதிரடி அறிவிப்பு

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட்