close
Choose your channels

சுந்தர் சியின் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Friday, January 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ‘அன்பே சிவம்’, ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இயக்குநர் சுந்தர் சி நடிகராகவும் தன்னை நிரூபித்து உள்ளார் என்பதும் அவர் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் சுந்தர் சி முதல் முதலாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் ’தலைநகரம்’ என்பதும் சுராஜ் இயக்கிய இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதும் 16 வருடங்களுக்கு பிறகு உருவாகும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் ’தலைநகரம் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை வி.இசட். துரை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே அஜித்தின் ‘முகவரி’ சிம்புவின் ‘தொட்டி ஜெயா’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் குறித்த தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.