ஞாயிறு முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் மிக வேகமாக பாதித்து வரும் நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்றும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இரவு நேர ஊரடங்கின் போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தள்ளிவைப்பு என்றும், அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தடை என்றும், உணவகங்களுக்கு கட்டுப்பாடுகள் என்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி ரத்து என்றும், பூங்காக்கள், உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

இவர்தான் 'காக்கா முட்டை' படத்தில் நடித்தவரா? விவேக்கின் பழைய டுவிட்டை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்

நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு, நேற்று அதிகாலை உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்கியது என்பதும் நேற்று மாலை நடந்த

விவேக் மறைவு குறித்து நயன்தாராவின் நெகிழ்ச்சியான பதிவு:

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் நேற்று காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் அஞ்சலி செலுத்தினார்கள் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று இறுதி மரியாதை

அஜித், சூர்யா பட நாயகிக்கு கொரோனா தொற்று: வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்!

அஜீத், சூர்யா உள்பட ஒருசில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

விவேக் மரணத்திற்கு பின் அவரது மனைவி அருள்செல்வியின் முதல் செய்தியாளர் சந்திப்பு!

நடிகர் விவேக் நேற்று காலமான நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விவேக்கின் ஒரு கோடி மரம் கனவு: விஜய் ரசிகர்கள் எடுத்த சபதம்!

விவேக்கின் ஒரு கோடி மரம் நட வேண்டும் என்ற கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் என விஜய் ரசிகர்கள் சபதம் ஏற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது