சூப்பர்ஹிட்டான சுந்தர் சியின் முதல் படத்தின் இரண்டாம் பாகம்! 

  • IndiaGlitz, [Thursday,September 23 2021]

சுந்தர் சி ஹீரோவாக நடித்த முதல் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது

சுந்தர் சி இயக்கிய பல திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் அவர் நடித்து இருந்தாலும் அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் ’தலைநகரம்’. சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் தான் சுந்தர் சி ஹீரோவாக அறிமுகமானார் என்பது இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற வடிவேலு காமெடி இன்றளவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த படம் வெளியான நிலையில் 15 ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இந்த படம் குறித்த உறுதி செய்யப்பட்ட தகவல் தற்போது வெளிவந்துள்ள நிலையில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படத்தை வி.இசட் துரை என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை 3’ திரைப்படம் வரும் அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'வலிமை' வீடியோ ரிலீஸ் எப்போது?

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் வீடியோ ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அந்த வீடியோ வெளியாகும் நேரம் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

க்ளீன் போல்டான SRH சன்ரைசர்ஸ் அணி… ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறுமா?

ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரின் 33 ஆவது லீக் ஆட்டம் நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணிக்கும் சன் ரைடர்ஸ்

காஜல் அகர்வால் விலகியதால் 62 வயது நடிகருக்கு ஜோடியான இலியானா!

62 வயது நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக நடிகை இலியானா ஒப்பந்தமாகி இருப்பதாக

ஓலா டாக்ஸி ஓட்டும் சிம்பு பட நடிகை: வைரல் புகைப்படம்!

சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது வறுமையின் காரணமாக ஓலா டாக்சி ஓட்டி வருவதாக நடிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

விஜய்சேதுபதியுடன் இணைந்த ரெஜினா: எந்த படத்தில் தெரியுமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும், சமீபத்தில் அவர் நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகின என்பது தெரிந்ததே