close
Choose your channels

வடிவேலு இல்லாமல் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? ரசிகர்கள் அதிருப்தி!

Tuesday, July 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வடிவேலு நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த ’சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஒரு பேருந்து மற்றும் முரளி, வடிவேலு மற்றும் ஒரு எலி ஆகியோர் செய்யும் நகைச்சுவை காட்சிகள் இந்த படத்தில் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் என்பதும், அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இதில் வடிவேலு கேரக்டர்களில் யோகி பாபுவும், முரளி கேரக்டரில் கருணாகரனும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழில் ஏற்கனவே பல இரண்டாம் பாகம் திரைப்படங்கள் வெளிவந்து சுமாரான வெற்றியையே பெற்றிருக்கும் நிலையில் சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெற்றியை பெறுமா? வடிவேலு வேடத்தில் நடிக்கும் யோகிபாபு ரசிகர்களை திருப்தி அடைய செய்ய வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.