'செல்பி புள்ளே' பாடகிக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை

  • IndiaGlitz, [Tuesday,November 24 2015]

விஜய் நடித்த 'கத்தி' திரைப்படத்தில் 'செல்பி புள்ளே' என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து பாடிய பாடகி சுனிதி செளகான், ஹாலிவுட் அனிமேசன் திரைப்படத்தின் இந்தி பதிப்பில் ஒரு பாடலை பாடியுள்ளதோடு, அந்த படத்தின் முக்கிய கேரக்டரான எலிசா என்ற கேரக்டருக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த ஃப்ரோசன் (Frozen) என்ற அனிமேசன் படத்தின் இந்தி பதிப்பு விரைவில் டிஸ்னி சேனலில் வரும் டிசம்பர் 12 அன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்திய ரசிகர்கள் இந்த அனிமேசன் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

ஃப்ரோசன் திரைப்படம் ஆஸ்கர், கோல்டன் க்ளோப் உட்பட எண்ணற்ற விருதுகளை அள்ளியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலக அளவில் புகழ் பெற்ற ஒரு படத்தில் கோலிவுட் பாடகி ஒருவர் பணிபுரிந்தது பெருமையான ஒரு விஷயமாக கருதப்படுகிறது.

பாடகி சுனிதி செளகான் கவுதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் இடம்பெற்ற 'முதல்முறை' என்று தொடங்கும் பாடல் உள்பா ஒருசில பாடல்களை பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விக்ரம்-ஆனந்த் சங்கர் படத்தின் இசையமைப்பாளர்

சமீபத்தில் வெளிவந்த விக்ரம் நடித்த '10 எண்றதுகுள்ள' திரைப்படம் சுமாரான வசூலை தந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள...

கமல் டைப்பில் நாட்டை விட்டு வெளியேற யோசிக்கும் பிரபல நடிகர்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் 'விஸ்வரூபம்' படத்திற்கு பிரச்சனை ஏற்பட்டபோது உலக நாயகன் கமல்ஹாசன், 'நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக அறிவித்தார்...

பாரீஸில் ஜி.வி.பிரகாஷின் 'புரூஸ் லீ' படப்பிடிப்பு ஆரம்பம்

கோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், நடிகராகவும் வெற்றி பெற்று வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்'...

சூப்பர் ஸ்டாரின் கபாலியுடன் கனெக்ஷன் ஆன 'விஜய் 60'

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 59' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் நாளை நள்ளிரவு 12மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் 'விஜய் 60'...

கருணாநிதி, விஜயகாந்துடன் நடிகர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால்...