close
Choose your channels

சண்டை போட்டா தான் மக்கள் லவ் பண்ணுவாங்களா? ஜாக்குலின் குறித்து அன்ஷிதா

Thursday, October 10, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி நான்கு நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், இப்போதே நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்பதும் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட இருக்கிற நிலையில் இன்னும் விறுவிறுப்பாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில் சண்டை கோழியாக ஜாக்குலின் மாறியுள்ள நிலையில், அவரது நிலை குறித்து ஏற்கனவே பார்வையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஜாக்குலினை கொஞ்சம் கூட பிடிக்காத சுனிதாவும் அவரைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார்.

அன்சிதாவிடம் சுனிதா கூறியபோது, ‘எனக்கு ஜாக்லின் ஏன் செட் ஆகவில்லை என்றால், எல்லாவற்றுக்கும் சண்டை போடும் விதத்தில் பேசக்கூடாது" என்று சொல்ல அதற்கு அன்ஷிதா ‘அது சண்டை அல்ல, ட்ரிக்கர் செய்வது என்று கூறுகிறார். மேலும் , "சண்டை பண்ணாதான் மக்கள் லவ் பண்ணுவாங்க என்று ஜாக்குலின் நினைக்கிறாரோ’ என்று கூற, "உண்மையாகவே நீ என்ன செய்கிறாயோ, அதுதான் மக்களுக்கு விருப்பமாக இருக்கும். ஜாக்குலின் பேசும் விதமே சரியில்லை. அது சண்டை போடுற மாதிரியே இருக்குது" என்று சுனிதா கூறுகிறார்.

மேலும் சண்டை போடுவது என்பது ஜாக்குலின் இயல்பு, அதனால் அவரிடம் இருந்து தூரமாக இருந்து கொள்வது நல்லது, எனக்கு அவர் செட் ஆக மாட்டார்" என்று சுனிதா கூறுவதுடன், இன்றைய மூன்றாவது புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos