close
Choose your channels

சன்னிலியோன் எடுக்கும் புது முயற்சி: அதுக்கு இவர் செட் ஆவாரா?

Saturday, February 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற சன்னிலியோன் அதன்பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட்டில் அவருடைய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பிற இந்திய மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தமிழில் கூட அவர் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதா? என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை

இந்த நிலையில் ஒரு புதிய வெப்சீரிஸ் ஒன்றில் சன்னி லியோன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சன்னி லியோன் உறுதி செய்துள்ளார். இந்த வெப்சீரீஸ் முழுக்க முழுக்க ஒரு காமெடி தொடர் என கூறப்படுகிறது. இந்த தொடரில் நடிப்பது குறித்து சன்னிலியோன் கூறியபோது, ‘இந்த தொடர் குறித்து தான் அதிகம் பேச முடியாது என்றும், ஆனால் இந்த தொடரில் நடிப்பது தான் உற்சாகமாக நடித்து வருவதாகவும் கூறியுள்ளார். காமெடி தனக்கு எப்போதும் பிடிக்கும் என்றும் மற்றவர் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும் நல்ல செயல் தான் காமெடி என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பாலியல் படங்களில் நடித்த சன்னி லியோனுக்கு காமெடி வருமா? என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். ஆனால் இந்த கிண்டலுக்கு பதிலடி தரும் வகையில் சன்னி லியோனின் இந்த தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரில் நடிப்பதால் தனது கிடைக்கும் சம்பளம் முழுவதையும் மும்பையில் உள்ள ஒரு அனாதை இல்லத்திற்கு அவர் நன்கொடையாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.