close
Choose your channels

சென்னையில் சன்னிலியோன்: பிரபல நடிகையுடன் நேரடி நிகழ்ச்சி

Saturday, November 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் சமீபத்தில் கேரளா வந்திருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள நேரடி நிகழ்ச்சியில் சன்னிலியோன் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்னிலியோனுடன் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். ஆண்ட்ரியாவின் பாடலுக்கு சன்னிலியோன் டான்ஸ் ஆடும் இந்த நிகழ்ச்சி சென்னையில் முதன்முதலாக நடைபெறவிருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.