சன்னிலியோன் கணவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தற்போது அவரது கணவர் டேனியல் வெபர் என்பவருடன் வசித்து வருகிறார் என்பதும் இந்த தம்பதிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட லாத்தூர் என்ற பகுதியில் இருந்து நிஷா கவுர் என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சன்னிலியோன் கணவர் டேனியல் வெபருக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை டேனியல் வெபர் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த குழந்தைகளுக்கு தான் நோவாசிங் வெபர் மற்றும் அஷெர் சிங் வெபர் என்று பெயர் வைத்துள்ளதாகவும், இது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயம் என்றும் என்று மகிழ்ச்சியுடன் கூறியதோடு இரட்டை குழந்தைகளுடன் தத்தெடுத்த பெண் குழந்தையுடன் போஸ் கொடுக்கும் படத்தையும் பதிவு செய்துள்ளார்.

இந்த குழந்தைகள் குறித்து சன்னிலியோன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'திருமண வாழ்க்கையில் மிக குறைந்த காலத்திலேயே மூன்று குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆகப்போகிறோம் என்பதை நானும் எனது கணவர் டேனியல் வெபரும் ஜூன் 21ஆம் தேதிதான் தெரிந்துகொண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரட்டை ஆண் குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் டேனியல் வெபருக்கு பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.