சன்னிலியோன் உயிரை காப்பாற்றிய விமானி

  • IndiaGlitz, [Thursday,June 01 2017]

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் தனியார் விமானம் ஒன்றில் வெளிநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக திடீரென விமானம் நிலை குலைந்தது. விமானம் விபத்தில் சிக்கிவிடுமோ என்று அனைவரும் அஞ்சிய நிலையில், அனுபவம் வாய்ந்த விமானி, தனது திறமையால் பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார்.

சன்னிலியோன் உள்பட அனைவரையும் பெரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றிய விமானிக்கு அனைவரும் நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ' நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார். அந்த சமயத்தில் நாங்கள் அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தோம். ஆனால் அதே நேரத்தில் எங்களை போல விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே நடுங்குகிறது' என்று அவர் இந்த சோகத்திலும் நகைச்சுவையை இணைத்துள்ளார்.

மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம் என்றும் எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் கூறிய சன்னிலியோன் தன்னை டுவிட்டரில் நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

More News

15 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் பிரபல ஹீரோக்கள்

பிரபல நடிகர்கள் சரத்குமார் மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்த 'தென்காசிபட்டணம்' திரைப்படம் கடந்த 2002ஆம்...

வங்கி சேவை பிடிக்கவில்லையா? கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றும் புதிய வசதி! ரிசர்வ் வங்கி அதிரடி

நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் சேவை பிடிக்கவில்லை என்றால் அந்த வங்கியின் கணக்கை முடித்து கொண்டு வேறு...

மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி

பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய படங்கள் அனைத்திலும் நாயகன், நாயகி மாறுவார்களே தவிர சந்தானம் மட்டுமே மாறவே மாட்டார்...

சச்சின் தெண்டுல்கருடன் இணைந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சமீபத்தில் வெளிவந்த சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'சச்சின்...

மீண்டும் பயங்கர தீ: தீ நகரானது தி.நகர்

சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு பிடித்த தீ...