'காவாலா' காய்ச்சல் இன்னும் ஓயவில்லையா? தப்பு தப்பாய் டான்ஸ் ஆடிய சன்னி லியோன் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,September 30 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும் தகவல்

ரஜினிகாந்த் நடிப்பு, நெல்சன் இயக்கம், அனிருத் இசை ஆகிய எல்லாவற்றையும் தாண்டி ’காவாலா’ என்ற பாடலுக்கு தமன்னா நடனம் ஆடியது மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.

அதுமட்டுமின்றி இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் நடனமாடிய வீடியோவும் இணையத்தில் வைரலாகியது.

இந்த நிலையில் ’காவாலா’ காய்ச்சல் ஒருவழியாக ஓய்ந்து விட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நடிகை சன்னி லியோன் ’காவாலா’ பாடலுக்கு நடனமாடி ப்ராக்டிஸ் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் இந்த வீடியோவின் கேப்ஷனாக, ‘தப்பு தப்பாக ஸ்டெப்ஸ் போட்டு ஆடுகிறேன் என்பது எனக்கு தெரிகிறது, ஆனால் ஒரிஜினல் வீடியோவில் எல்லாவற்றையும் சரி செய்து விடுவேன் என்று நம்புகிறேன். சீக்கிரமே உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். எனவே விரைவில் சன்னி லியோன் நடமாடிய முழு ’காவாலா’ வீடியோவை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.