close
Choose your channels

ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் முதலிடம் பெற்ற சன்னிலியோன்!

Wednesday, February 20, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பீகார் மாநில அரசு நடத்திய ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் சன்னிலியோன் தேர்ச்சி பெற்றது மட்டுமின்றி மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் பெற்ற மதிப்பெண் 98.5% ஆகும்.

ஆனால் இந்த சன்னிலியோன் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் அல்ல என்பதும் இவர் பீகாரை சேர்ந்த லியோனா லியோனி என்பவரது 28 வயது மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த செய்தியை பார்த்த கவர்ச்சி நடிகை சன்னிலியோன் தனது சமூக வலைத்தளத்தில் 'என்னுடைய பெயரில் உள்ள ஒருவர் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சியே' என்று தெரிவித்துள்ளார்.

ஜூனியர் எஞ்சினியர் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற சன்னிலியோனுக்கு விரைவில் பணிநியமனம் செய்யப்படும் என தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.