close
Choose your channels

சன்னிலியோனின் தமிழ் திரைப்படத்தின் டைட்டில்லுக் போஸ்டர் ரிலீஸ்!

Wednesday, September 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஏற்கனவே ’வடகறி’ என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ’வீரமாதேவி’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் இன்னொரு தமிழ் படத்தின் டைட்டில் லுக் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ’ஓ மை கோஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் யோகிபாபு, டிக்டாக் புகழ் ஜிபி முத்து,தர்ஷா குப்தா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் ஜிபி முத்துவுக்கு ஜோடியாகத்தான் சன்னிலியோன் நடித்து வருவதாக கூறப்பட்டது.

யுவன் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சசிகுமார் மற்றும் வீரசக்தி ஆகியோர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.