அடுத்த ஹிட்டுக்கு தயாராகிவிட்ட சமந்தா

  • IndiaGlitz, [Friday,June 08 2018]

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் மார்க்கெட் குறைந்துவிடும் என்பது கோலிவுட் திரையுலகின் செண்டிமெண்ட் ஆக இருந்தது. ஆனால் அந்த செண்டிமெண்டை உடைத்து காட்டியவர் நடிகை சமந்தா.

சமந்தாவின் திருமணத்திற்கு பின்னர் வெளியாகிய 'ரங்கஸ்தலம்', 'நடிகையர் திலகம்' மற்றும் ''இரும்புத்திரை' ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சமந்தாவின் அடுத்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சமந்தா தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்,. 'புயலுக்கு பின் அமைதி. இந்த ஆண்டின் முதல் பாதி அற்புதமாக இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் அதிர்ஷ்டம் ஆரம்பமாகியுள்ளது. சூப்பர் டீலக்ஸ் டப்பிங் ஆரம்பம்' என்று குறிப்பிட்டுள்ளார். சமந்தா இந்த படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் செய்யவுள்ளதால் கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது