கார்த்தியின் 'ஜப்பான்' படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க பிரபல இயக்குநர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜப்பான்’ . தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி புஷ்பா பட வில்லன் சுனில் இந்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக பிரபல இயக்குனர் விஜய்மில்டன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் இந்த படத்திற்காக 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும் இந்த படத்தில் அவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் விஜய்மில்டன் ஏற்கனவே பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணி செய்துள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி ’கோலிசோடா’, ‘10 எண்றதுக்குள்ள’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

இதுமட்டும் வேண்டவே வேண்டாம்: அஜித்தின் முக்கிய அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான அஜித் எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை என்றாலும் அவர் தனது ரசிகர்களுக்கு சொல்ல வேண்டிய முக்கிய தகவல்களை தனது மேனேஜர் மூலம் கூறி வருகிறார் என்பது தெரிந்ததே. 

ஓடிடியில் 'காந்தாரா' ரிலீஸாகும் தேதி இதுவா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பிரபல கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து  இயக்கிய 'காந்தாரா' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில்

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் 'விக்ரம் வேதா' இயக்குனர்களின் படைப்பு!

 விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடித்த 'விக்ரம் வேதா' படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படைப்பு அமேசான் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் தமிழ்: கடைசியில இந்த வார எலிமினேஷன் இவர் தானா? 

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் யாராக இருக்கும் என்ற தகவல் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் இணையும் 'விக்ரம்' கூட்டணி: இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது உலகம் முழுவதும் இந்த படம் ரூ.400 கோடிக்கு