close
Choose your channels

சிவகார்த்திகேயன் ஜோடியாகும் சூப்பர்ஹிட் படத்தின் நாயகி!

Thursday, December 2, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஹிட் படத்தின் நாயகி, சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ஜோடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தில் நாயகியாக நடித்த ரிதுவர்மா, சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’டான்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அவர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘அயலான்’ மற்றும் ’சிங்கப்பாதை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகும் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் ஆனார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் அனுதீப் இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில்தான் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரிதுவர்மா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ரிதுவர்மா ஏற்கனவே தெலுங்கில் பிரபலம் என்பதும், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ வெற்றிக்கு பின் அவர் தமிழிலும் பிரபலமாகிவிட்டதால் இந்த படத்தின் நாயகியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.