சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. பிரபல நடிகர் அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,January 15 2023]

கடந்த சில ஆண்டுகளாக ஏற்கனவே சூப்பர் ஹிட் ஆன படங்களின் இரண்டாம் பாகங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை பிரபல நடிகர் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவான திரைப்படம் ’எஃப்ஐஆர்’. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த படம் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’எஃப்ஐஆர்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூகவலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ’எஃப்ஐஆர் 2’ படம் விரைவில் தொடங்கப்படும் என அவர் அறிவித்துள்ளதை அடுத்து இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் இயக்குனர் மனு ஆனந்த், பிரின்ஸ்பிக்சர் நிறுவனம் தயாரிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்புக்கொண்ட நிலையில் அந்த படம் தான் விஷ்ணு விஷாலின் ’எஃப்ஐஆர் 2’ படமா? அல்லது முதல் பாகத்தை தயாரித்த விஷ்ணு விஷாலே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ரூ.100 கோடி வசூலை தாண்டிய 'வாரிசு' - 'துணிவு': பொங்கல் வின்னர் யார்?

அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜய் நடித்த 'வாரிசு' ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் இந்த படங்களின் நான்கு நாள் வசூல் குறித்து தற்போது பார்ப்போம். 

கடைசி வாரத்தில் ஷிவினை கதறி அழவைத்த போட்டியாளர்: கமல் நெகிழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் இன்று நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் கிரான்ட் ஃபினாலே நடைபெற உள்ளது என்பதும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களில் ஒருவர் டைட்டில் வின்னராக

பிரபுதேவாவின் 60வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

தமிழ் திரை உலகின் நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனரான பிரபுதேவாவின் 60வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

நீங்க தான் என் ஹீரோ.. என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனை: வம்சி வெளியிட்ட வீடியோ

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி 'என் வாழ்நாளில் இதுதான் மிகப்பெரிய சாதனை, நீங்கள் தான் என்னுடைய ஹீரோ' என்று கூறி பதிவு செய்துள்ள நெகிழ்ச்சியான வீடியோ

மீண்டும் மணிரத்னம் உடன் மோதும் தனுஷ்?

தனுஷ் நடித்த 'நானே வருவேன்' என்ற திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் ரிலீஸ் தினத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் 'பொன்னியின் செல்வன்'